விடுதலைப் போரின் விழுதுகள்
ஈழ விடுதலைப் போரின் விளைவுகளை அவரவர், அவரவர் மனப்போக்கில் ஆராயும் போதினில் இனமானம், மானுட விழுமியம் ஆகியவற்றைப் போற்றும் பொதுவுடைமைக் கொள்கையாள்ரின் கண்ணோட்டந்தான் பின் வருவது:
சிந்தனையின் வேர்:
அரசியல்-பொருளாதாரத்தை அடிநாதமாகக் கொண்டு மட்டுமே சிந்திக்கும் மானுட நேயர்கள் - விளைவுகளைக் குறைகளாகக் காண் இயலாது. விஞ்ஞானக் கண்ணோட்டமென்பது சிதைவுகளிலிருந்து தளிர்களைக்காணும் மனோபாவமும் பக்குவமும்தான். இது தான் துளிர்விடும் விளைவை உறமிட்டு வளர்க்கும்.
அரசியல்-பொருளாதாரம்:
மானுடவாழ்வில் சில நூற்றாண்டுகால போராட்ட வாழ்வுதான் அரசியல்-பொருளாதாரத்தின் அடிப்படை. என்று? அடிமைப்படுத்துதலும் எதிராக, விடுதலைப் போர்களும் தொடங்கினவோ அவைதான், மனிதன் அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டம் பெற்றுவிட்டான் என்பதை உலகுக்கு உணர்த்தின. இது, மானுடவாழ்வின் இயல்பான பகுத்தறிவு வளர்சியின் தொடர்ச்சியே. எனவே, சமாதான சகவாழ்வு என்பதெல்லாம் சமபலம் பொருந்திய சமர்களுக்குப் பிறகேதான்.
விடுதலை வேள்வி:
விடுதலைப் போர்களின் சம பலம் என்பது பல்வேறு, தத்துவ, அரசியல், சமூக, கலாச்சார விடயங்களின் சமத்துவம். ஆண்மை/ஆளுமையானது மேலாண்மையாகி தத்துவ, அரசியல், சமூக, கலாச்சார மேலாண்மையாகி - அடிமைத்துவத்தை உருவாக்கும் வல்லமைகொள்ளும் போது அதற்கெதிரான சுதந்திரப் போராட்டம் தோன்றுதலும் வீறுகொல்ளுதலும் வரலாற்று இயல்பு. இப்போராட்டத்தை மீண்டும் மீண்டும் அடக்கி வல்லாண்மைகொள்ளுதலும் நடந்துகொண்டேயிருக்கும், எதுவரை?
இயற்கையில், விஞ்ஞானத்தின்பாற்பட்டு எல்லையற்றதென்பதேதும் இல்லைதானே!
வரம்பில்லா முடியாட்சியெல்லாம் முடிந்ததுபோலவே இன அடிமைப்படுத்தலும், மத அடிமைப்படுத்தலும், நிற அடிமைப்படுத்தலும் பொருளாதார அடிமைப்படுத்தலும் தத்துவ-அரசியல் அடிமைப்படுத்தலும் கலாச்சார அடிமைப்படுத்தலும் தீர்ந்தேயாகவேண்டும்.
விடுதலைப் பாதை:
விடுதலை - இன, மத, கலாச்சார, அரசியல், பொருளாதார – வேள்வியின் தீவிரமும் கூர்மையும் எந்த அம்சத்திற்கான விடுதலை என்பதாக அல்லாமல் அடிமைப்படுத்துதலின் வடிவ மற்றும் வகையின் தீவிரத்திற்கு அதிரானதாகவே அமையும். அது ரத்தமும் தசையுமான ஆயுத அடிமைப்படுத்தலா? அறிவு ரீதியான அரசியல் மற்றும் பழக்க வழக்கத்தாலான கலாச்சார அடிமைப்படுத்தலா? வஞ்சகமான – தத்துவ மற்றும் பொருளாதார அடிமைப்படுத்தலா? என்பவற்றைப் பொருத்ததே!
மேற்கண்டதில் எதாகிலும் அடிமைத்துவத்தின் ஆரம்பம் வன்முறையான-மிருகத்தனமான தொடக்கமே என்பதால் அதன் இறுதிக்கட்டமும் வமையான ஆயுதபாணியாலேயே தீர்வு காணப்பட்டாக வேண்டும்.
இன்றளவிற்கு மானுடவியல் எவ்வளவுதான் நாகரீகப்பட்டிருந்தாலும் ஆயுதமற்ற சமூகக் கட்டமைப்பு எங்கும் காணக்கிடைக்கவில்லையாகையால், ஆயுதமற்ற போராட்டம் - அதுவும் இறுதித் தீர்வுக்கான போராட்டத்தில் ஆயுதம் துறத்தல் என்பது - இயல்பாகவும் எதார்த்தமாகவும் சாத்தியமற்றது. சுருக்கமாக, அடிமைப்படுத்தல் எந்த வடிவத்தில் உள்ளதோ அதற்கெதிரான விடுதலைப் போராட்டமும் அவ்வாறானதாகவே அமையும்.
அதே நேரத்தில், விடுதலை நேயர்களின் விருப்பம் மானுட நேயமாகும்போது, மானுடத்தின் மீதான அளப்பறிய பற்றால் அவர்களின் அணுகுமுறை ஆளுமையாளர்களின் அணுகுமுறையைவிட பன்மடங்கு விஞ்ஞான பூர்வமானதாகவும் மனித அழிவை கூடுமானவரை தவிர்ப்பதாகவுமே அமையும். போர்களின்போது, பூகோளம் முக்கியமாகும்போது, எந்தப்புறம் இயல்பாகவோ தவிர்க்க இயலாமலோ பெரும்பான்மை மக்களை ஆக்கிரமிக்கிறதோ அதுவே வெற்றிபெற்றதாகிறது.
விடுதலைப்போரின் பாதையும் பரிமாணமும்:
விடுதலைப்போரின் பாதையும் பரிமாணமும் திசையும் பல்லாண்டுகால போராட்டத்தின்பால் பரிணாமம் பெறுகின்றன. இந்தப் பரிணாமம் சிறு சிறு பகுதிரீதியானதாக மாறி வளரும்போது அரசியல்-பொருளாதாரம்-ராணுவம்-சமூகம் போன்ற இன்னபிற கட்டமைப்புகளை உள்ளடக்கி வளரும் தருணம் மிக மிக முக்கியமும் பக்குவமும் பெறுகிறது. இது சொந்த படிப்பிணைகளோடு கூட வரலாற்றுப் பொருள்முதல்வாதம், அரசியல் பொருள்முதல்வாதம், சமகால உலகலாவிய அரசியல்-பொருளாதார-சமூக-நாகரீக-விஞ்ஞான-கலாச்சார அம்சங்கள் அனைத்தும் பற்றிய தரமான-விசாலமான-படிப்பும்-பார்வையும் மிக மிக முக்கியம். இதை எந்தவொரு தனிப்பட்ட மனிதனோ, ஒரு சிலர்கொண்ட குழுவோ செய்ய சாத்தியமில்லை. பலரை உள்ளடக்கிய, பல்வேறு அமைப்புகளே சாத்தியப்படுத்தும்.
விடுதலைப் புலிகள் தங்களது வீர சமர்களுக்கு மத்தியில் இவை அனைத்தையும் செய்தார்களா?! இவற்றின் குறிப்பான வெளிப்பாடான மக்களின் பொது நலன், பொருளாதார நலன், மன நலன் எப்படியிருந்தது?! தேவைக்கேற்ற உற்பத்தியும்-விநியோகமும், பண்ட-பண பரிமாற்றமும் பகிர்வும், அரசியல்-கல்வி-கலாச்சார நடவடிக்கைச் சுதந்திரம், போர்-புகலிட தயாரிப்பு, பங்களிப்பு மற்றும் பயிற்சி எப்படியிருந்தன?! வெளி உலகத்தோடு, அண்டை நாட்டு சொந்தங்களோடு தகவல்-போக்குவரத்து-கலாச்சார பரிமாற்ற நிலை என்ன? விடை பகர்வோர் யார்? யார்? யார்?
தமிழீழ விடுதலை: ஈழ விடுதலைப்போரின் வளர்ச்சியில் நிலப்பரப்பை, பெரும்பான்மை தமிழ் மக்களை உட்கவர்ந்த(ராணுவ மேலாண்மை) ஈழப்போராளிகள் அவர்களின் உழைப்பை, உற்பத்தியை பிற பகுதியோடு செய்யும் அரசியல் வல்லமையை வகுக்காததாலேயே-பொருளாதார மேன்மையை அடையாததாலேயே- பற்றாக்குறையால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துவிட்டார்கள். மீண்டுமொரு விடுதலைப் போராட்டமென்பது பெரும்பான்மை நலந் நடப்புலகின் சராசரிபாற்பட்டது- பேணும் பொருளாதார வல்லமையைப் பொருத்தே அமையும். அது எங்ஙனம் அமையும்? அமைவோம்! ஆழ்ந்துணர்வோம்! .............தொடர்வோம்
வெள்ளி, 27 நவம்பர், 2009
புதன், 16 செப்டம்பர், 2009
திங்கள், 14 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
